அனைத்துத் தொகுதியிலும் ஆண் பெண் வேற்றுமை இல்லாமல் அனைவரும் போட்டியிடலாம் என்பது திறனுள்ளவர் மக்களுக்கான பணியை செய்ய எந்தத் தடையும் இல்லை என்பதை உறுதி செய்கின்றது. ஆனால் புதிய மகளிர் மசோதா ஆண்களை அடிமைப்படுத்தும் செயல், ஓட்டுக்காக மக்களை முட்டாளாக்கும் செயல். சோதனை முயற்சியாக ஒரு கிராமத்தை தேர்வு செய்து 33 குடும்பத்தை பெண்கள் நிர்வகிக்க வேண்டும், சுழற்சி அடிப்படையில் அடுத்த இரண்டு ஆண்டுகள் வேறு 33 குடும்பத்தை பெண் நிர்வகிக்க வேண்டும் ஆறு ஆண்டுக்குப் பிறகு ஆய்வு செய்தால் அந்த கிராமம் வருமையில் இருக்கும் என்பது உறுதி, காரணம் பாதிக்கு மேற்பட்ட குடும்பத்தை பெண்கள் நிர்வாகம் செய்கின்றார்கள் என்பது உண்மையாக இருந்தாலும்,திறமை இல்லாத ஆணோ பெண்ணோ சுழற்சி முறையில் ஒரு குடும்பத்தை நிர்வாகம் செய்யும் போது அந்த குடும்பம் இரண்டு ஆண்டுகளில் சீரழிந்து விடும். திறமை இல்லாதவர்கள் கையில் வீட்டு நிர்வாகம் சென்றால் வீடு பாதிக்கும்போது நாட்டு நிர்வாகம் ஐந்து ஆண்டுகள் திறமை இல்லாதவர்கள் கைக்கு சென்றால் ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் தீமையே என்பதை உணர்ந்து ஆண் பெண் அனைவரும் இணைந்து மக்களுக்கு எதிரான, ஜனநாயகத்துக்கு எதிரான, மகளிர் மசோதாவை எதிர்க்க வேண்டும்.