பெருந்தலைவர் காமராசர் தேர்தலில் தோற்றதற்கு மக்களின் அறியாமை காரணமல்ல. காமராசர் சார்ந்திருந்த காங்கிரஸ்தான் அதற்கு காரணம்.காங்கிரசுக்கும், திமுக வுக்கும் நடந்த கொள்கை போரில் திமுகவின் மாநில சுயாட்சிக் கொள்கையே வென்றது.காமராசரைவிட அண்ணா நேர்மையானவர், ஒழுக்கமானவர், என்பதற்காக நம் முன்னோர்கள் அண்ணாவை தேர்ந்தெடுக்க வில்லை என்பதை இளைஞர்கள் நினைவில் வைத்துககொள்ள வேண்டும்.மாநில கட்சியான திமுக 1967 இல் தமிழ்நாட்டில் வெற்றி பெறாமல் இருந்திருந்தால் நாம் வட மாநிலத்தவருக்கு அடிமைகளாகதான் இருந்திருப்போம்.
யாரும் இங்கு நேர்மையானவன் அல்லஅனைவரும் பதவிக்கு தான் அலைகின்றார்கள்,எனவே கொள்கையை பாருங்கள். தலைவனின் வார்த்தையில் கொள்கை இல்லை,அவன் வாழ்ந்த வாழ்க்கையில் அவன் கொள்கை உள்ளது.