குடிக்காதடான்னு சொல்ல ஒரு ஒழுக்கமான அரசியல் தலைவரும் நம்ம நாட்டில் இல்லை...
20 June 2024by
Vijayakumaran
குடிக்கிறவன பார்த்து குடிக்காதடான்னு சொல்ல ஒரு ஒழுக்கமான, தகுதியான அரசியல் தலைவரும் நம்ம நாட்டில் இல்லை,
மது அருந்துபவர்கள் கட்சி பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று எந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் சொல்ல துணிவு இல்லை, அப்படி சொன்னால் ஒரு உறுப்பினர் கூட கட்சியில் இருக்க மாட்டார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
அனைத்து அரசியல் கட்சிகளும் பாகுபாடு இல்லாமல் மதுவை கொடுத்து தான் மக்களை சேர்க்கின்றார்கள், ஆனால் மது ஒழிய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மட்டும் போராடுகின்றார்கள்.
லஞ்சம் வாங்கி, மதுவை கொடுத்து அரசியல் நடத்தும் அனைத்து கட்சிகளும் லஞ்சத்தை ஒழிப்பேன், மதுவை ஒழிப்பேன் என்று சொல்வதை கேட்கும் பொழுது வேடிக்கையாக உள்ளது.