Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing

    கடந்த காலத்தில் நடந்து முடிந்த நிகழ்வுகளை நிகழ்காலத்தில் மாற்ற முடியுமா?

  • All Blogs
  • Politics
  • கடந்த காலத்தில் நடந்து முடிந்த நிகழ்வுகளை நிகழ்காலத்தில் மாற்ற முடியுமா?
  • 30 April 2026 by
    Vijayakumaran
    திரைப்படங்கள், கார்ட்டூன் படங்களில் டைம் டிராவல் செய்து கடந்த காலத்துக்குச் சென்று, கடந்தகால நிகழ்வுகளை மாற்றுவது போல் நாம் திரைப்படம் பார்த்திருப்போம், அதுபோல் திரைப்பட நடிகர் பார்த்திபன் கடந்தகால நிகழ்வுகளின் தொடர்பு இல்லாமல் எந்த மதத்தையும், சாதியையும் சாராமல், பெற்றோர்களே இல்லாமல், பெற்றோர்கள் இல்லாததால் தாய்மொழியே இல்லாத ஒரு புது மனிதனாக இந்த தமிழ்நாட்டில் 27/4/26 அன்று முதல் பார்த்திபன் என்ற நபர் இந்த விலாசத்தில் வாழ்கின்றார் என்று சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் சான்று அளித்துள்ளார் இதை பார்க்கும் போது இவர்கள் முட்டாளா?அல்லது இவர்கள் மக்களை முட்டாளாக்க முயற்ச்சிக்கின்றார்களா என்று புரியவில்லை!

    மண்ணுக்கே தாய் பத்திரம் வேண்டும், தாய்ப்பதிரம் இருந்தால்தான் வில்லங்கம் இல்லாத சொத்து என்று மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும், மண்ணுக்கே இந்த நிலைமை என்றால் ஒரு மனிதன் பிறப்பால் நான் யார் என்பதை தெளிவு படுத்தினால் தான் அவர்கள் வில்லங்கம் இல்லாத மனிதர் என்று பொருள். தன்னுடைய மொழியையும், சாதியையும் ஏன் பார்த்திபன் மறைக்க வேண்டும்? இதற்கு அரசு ஏன் துணை போக வேண்டும்? தமிழர்கள் சிந்திக்க வேண்டும்!

    பிறப்பால் ஒருவர் எந்த சாதியை, மதத்தை, மொழியை சார்ந்தவர் என்று ஆய்வு செய்து சான்று கொடுப்பதுதான் வட்டாட்சியரின் கடமை.தனி மனிதனாக நமக்கு நாமே சாதி, மதம் சார்பு இல்லாமல் வாழ முடியும் என்று உறுதி கூற முடியாத நிலையில்,பார்த்திபன் சாதி, மதம் சார்பு இல்லாதவர் என்று எப்படி வட்டாட்சியர் சான்று கொடுக்க முடியும்?

    பார்த்திபன் தெலுங்கன் என்று தமிழக மக்களுக்கு தெரிந்தவுடன் தன் அடையாளத்தையே மறைக்கின்றார், அதையே புரட்சிகரமான செயலாகவும் பிதற்றுகின்றார். பிற மொழியினர் சாதி ஒழிய வேண்டும் என்பது தான் யார் என்பது தமிழர்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவே.

    சூழ்ச்சியால் பல ஆண்டுகளாக தமிழனை மாற்று மொழியினர் ஆண்டு விட்டார்கள் எனவே வருங்காலத்தில் தமிழர்கள் அரசியல் விழிப்புடன் வாழ வேண்டியது மிக மிக அவசியம்.

    in Politics
    தேர்தலில் 33 சதவீத இட ஒதுக்கீடு சரியா?
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us