ஜனநாயகத்தில் அனைவரின் கருத்தையும் ஏற்றுக் கொள்வதுதான் ஜனநாயகம். எனக்கு சரி என்று தோன்றுவது மற்றவர்களுக்கு தவறாக தோன்றும், அதனால் அவரை இழிவாகப் பேசுவது நற்பண்பு அல்ல.
இளையராஜா அவர்கள் பிரதமர் மோடியை சிறந்த பிரதமர் என்று புகழ்ந்து இருப்பது எனக்கு ஏற்புடையதாக இல்லை என்றாலும் அது அவருடைய கருத்து, அதை ஏற்பதும் ஏற்காததும் என்னுடைய விருப்பம்.
ஜனநாயகத்தில் எனக்கும் ஒரு வாக்கு தான், அவருக்கும் ஒரு வாக்கு தான். பிரதமரை ஆதரிப்பது அவருடைய உரிமை என்றால் எதிர்ப்பது என்னுடைய உரிமை, எனவே மாறுபட்ட கருத்து உடையவர்களை இழிவாக பேசுவது மனித பண்பு அல்ல.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மந்திரிசபையில் சட்டத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் அம்பேத்கரை இன்றைய பிரதமருடன் ஒப்பிடுவதை நாம் உயர்வாக தான் பார்க்கின்றேன். என்னுடைய பார்வையில் டாக்டர் அம்பேத்கர் சாதியில் சமத்துவத்தை ஏற்படுத்தியது போல் அனைத்து மாநில மொழிக்கும் இந்திக்கு நிகராக சமத்துவத்தை ஏற்படுத்தி இருந்தால் அவர் உண்மையில் சமத்துவவாதி தான். அம்பேத்கர் செய்ய தவறியதை இன்று பிரதமர் மோடி செய்தால் எனக்கு அம்பேத்கர் யைவிட மோடியே சிறந்தவர் என்று தோன்றும்.
நான் ஒருவரை சிறந்தவர் என்று ஏற்றுக் கொண்ட பிறகு தான் மற்றவர்களும் அவரை சிறந்தவர் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணுவது சரியல்ல.
அரசியலில் எதுவும் நடக்கும் எனவே அரசியலில் மாறுபட்ட கருத்து உடையவர்களை விமர்சிக்கும்போது பண்போடு விமர்சிப்பது நம்முடைய நற்பண்பை வெளிப்படுத்தும்.
நாம் பயன்படுத்தும் வார்த்தை தான் நம் உயரத்தை தீர்மானிக்கின்றது.