இருமொழிக் கொள்கை மட்டுமே இந்தியர் அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்தும்
5 September 2020by
Vijayakumaran
நம் கல்விமுறை அறிவை கொடுப்பதற்காக மட்டும் இருந்தால் இந்தி மட்டுமல்ல அனைத்து மாநில மொழியையும் படிக்கலாம் தவறு இல்லை, ஆனால் நம் கல்விமுறை ஒருவனுடைய அறிவுத்திறனையும் மதிப்பிடுவதால் இருமொழிக் கொள்கை மட்டுமே இந்தியர் அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்தும்.
நம் தாய்மொழியின் உரிமைக்காக குரல் கொடுத்திருக்கும் இசை அமைப்பாளர் யுவனை கேலி செய்யும் தமிழர்கள் தன் கையாலேயே தன் கண்ணை குத்திக்கொள்பவர்கள்.
தன்னுடைய குருதி என்று அறியாமல் தன் குருதியை தானே சுவைத்து அருந்தும் அரசியல் கைக்கூலி அரக்கர்களால் கடந்த 73 ஆண்டுகளாக வட இந்தியர்களிடம் மொழி அடிமையாக இருந்தது போதும்!
நம் தாய்மொழி உரிமைக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும் அவர்களை நம் எதிரியாக பார்க்கும் மனநிலையே மொழி புரட்சியின் வெற்றிக்கு வழிவகுக்கும்.
புதிய கல்விக் கொள்கை யில் மூன்றாவது மொழியை தேர்ந்தெடுக்கும் உரிமை மாணவனுக்கு இருப்பதுபோல் மூன்றாவது மொழி தேவையா இல்லையா என்பதையும் மாணவன் தேர்ந்தெடுக்க கூடிய உரிமையை மாணவனுக்கு கொடுக்க வேண்டும்.