மத்திய அரசின் நிர்ப்பந்தம் இல்லாமல் விருப்பமுள்ளவர்கள் இந்தி மொழியை கற்கலாமா ?
அறிவை பற்றி நான் செய்த ஆய்வில் கிடைத்த விடை —நாம் எதைப் பார்க்கின்றோமோ, எதை கேட்கின்றோம், எதை உணர்கின்றோமோ, அது நம்மை, நம் அனுமதி இல்லாமலேயே நம்மை ஆளஆரம்பித்துவிடும் என்பதே,இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. நாம் பெறுகின்ற அறிவு அனைத்தும் நமக்கு நன்மையை செய்யாது. நாம் பெற்ற பல அழிவுகள் நமக்கு சூனியம்மாகவே அமைந்துவிடுகின்றன.அதனடிப்படையில் இந்தியை தாய்மொழியாக இல்லாதவர்கள் இந்தியை விரும்பி கற்றுக்கொண்டால் அது அவர்களுக்கும், அவர் சார்ந்த சமுதாயத்திற்கும் கேடுதான்.
தாய் மொழியோடு வேறொரு மொழியை நாம் சேர்த்து கற்பதால் தாய்மொழியில் ஆளுமையும், தாய் மொழியின் சிறப்பும், தாய் மொழி சார்ந்த கலாச்சாரமும், சிதைவதால் நம்முடைய அடையாளத்தை இழந்து கொண்டு இருக்கின்றோம்.
அடையாளத்தை இழந்த சமுதாயம், தந்தை பெயர் தெரியாத அனாதை தான்.
தாய் மொழியை மட்டும் ஒருவன் கற்றால்தான் ஒருவனுடைய சிந்தனை ஆற்றலும், மொழி ஆளுமையும் உயரும் என்பது உலக நாடுகளின் ஆய்வின் முடிவு. இது யாரும் மறுக்க முடியாத உண்மை. இருப்பினும் நவீன காலத்தில், உலகம், தகவல் தொழில்நுட்பத்தால் சுருங்கி வருவதால் உலகப் பொது மொழியான ஆங்கிலத்தை இந்தியர்கள் அனைவரும் தாய்மொழியோடு சேர்த்து கற்க வேண்டும் என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் அவசியமாகின்றது, அதன்படி இந்தியர்கள் அனைவரும் தாய் மொழியோடு ஆங்கிலத்தையும் கற்பதால் மாநிலங்களுக்கு இடையே தகவல்தொடர்பு எளிதாகிவிடும். இந்த நிலையில் தேவையில்லாமல் மூன்றாவது மொழியை நாம் ஏன் விரும்பி கற்க வேண்டும்?
பல மொழிகள் பேசும், பல மாநிலங்களின் கூட்டாட்சி இந்தியாவில் ஒற்றை மொழியான இந்தி மட்டும் எப்படி இந்தியாவின் அடையாளமாக இருக்க முடியும். இது இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிரானது.
மதத்திலும், மொழியிலும், மாநில சுயாட்சியிலும்,இந்திய ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டே இந்திய ஒற்றுமையை பாதுகாப்பது போல் பேசுவதுதான் பிஜேபியின் தந்திர அரசியல்.
நம் தாய் மொழியில் நாம் பேசி மகிழ முடியாதபடி நம் குரல்வளையை நெறிக்கும் முன்பே, இந்தியை பேசாத ஒவ்வொரு இந்தியனும் தன் மாநில மொழிக்காக உரிமை குரல் கொடுக்க வேண்டும் என்பது கடமை.
கடமையை செய்வோம் !
உரிமையைப் பெறுவோம்!!
தேவை இல்லாமல் எதை ஒன்றை நாம் கற்றுக் கொண்டாலும், தேவையான ஒன்றை நாம் இழக்கின்றோம் என்று பொருள்.