இந்தியாவில் பல மாநில மொழிகள் இருக்க, இந்தியை மட்டும் தேசிய அலுவல் மொழியாக வட இந்தியர்கள் அறிவித்தது தேச ஒற்றுமைக்கு எதிரானது. இது மற்ற மாநில மொழிகளுக்கும்,மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை. எதிரியே தீர்மானிக்கிறான் நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று, சாதியாலும், மதத்தாலும், மக்களை பிரித்து அவர்களை anti indian என்று சொல்லி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, தேச ஒற்றுமையை கெடுத்து ஆட்சிக்கு வந்த பிஜேபி அரசு இன்று மொழியால் மாநிலங்களை பிரித்து, தேச ஒற்றுமையை சீர்குலைத்து, தென்னிந்தியர்களை மொழியால் அடிமைப்படுத்த நினைக்கின்றது. இந்த நிலையில் நாம் ஒன்றுபட்டு இந்தி வெறியர்களுக்கு நாம் எதிரானவர்கள் என்று குரல் கொடுக்காவிட்டால் அவர்கள் தவறை திருத்திக் கொள்ள மாட்டார்கள்.
இரண்டு மணி நேரம் மட்டுமே வந்து செல்லக்கூடிய புயலுக்கு பெயர் வைப்பதற்கே உலக நாடுகள் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு புயலுக்கும், ஒவ்வொரு நாட்டின் மொழியில் பெயர் வைத்து பன்னாட்டு கூட்டமைப்பு அனைத்து நாட்டு மொழியையும் மதிக்கின்றது. ஆனால் பல மாநில கூட்டமைப்பில் உள்ள இந்தியாவில் பல ஆண்டுகள் அமுலில் இருக்க வேண்டிய மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களை சுழற்சி அடிப்படையில் அனைத்து மாநில மொழிகளின் பெயரில் வைக்காமல், தொடர்ந்து இந்தியில் மட்டும் பெயர் வைப்பதை இந்தி அடக்குமுறை என்று சொல்லாமல் என்ன என்று சொல்வது?
இது தேச ஒற்றுமைக்கு நல்லதா ?
இந்தி மொழி வெறியர்களே சிந்தியுங்கள்!
தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி யில் மத்திய அரசு நிறுவனமான என்எல்சி அமைத்த தண்ணீர் பந்தலுக்கு DARA என்று இந்தி பெயரை வைத்து, இந்தி மொழியின் ஆளுமையை நம்மீது தொடர்ந்து தினித்து, இந்திய பன்முகத்தன்மையையும், இந்திய ஒற்றுமையையும், கெடுக்கும் ஹிந்தி வெறியர்களை நாம் எதிரியாக பார்க்காமல் எப்படி நண்பனாக பார்ப்பது. எனவே அனைத்து மாநில மொழியும் இந்திக்கு நிகராக தேசிய அலுவல் மொழி என்ற அங்கீகாரம் கிடைக்கும் வரை நாம் இந்தி வெறியர்களுக்கு எதிரானவர்கள் தான்.
வாழ்க அனைத்து மாநில மொழிகளும் !
வளர்க இந்தியாவின் ஒற்றுமை !!
இந்தியாவின் ஒற்றுமையை காத்திட,
அனைத்து மாநில மொழிகளையும் வளர்த்திட,
“I AM ANTI HINDI FANATIC “
என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன்.
எதிரியை எதிரி என்று பிரகடனம் செய்வது புதியது அல்ல, உலக இயல்பு தான். அதனால் தான் உலக நாடுகள், தவறான செயலில் ஈடுபடும் நாடுகள் மீது பொருளாதார தடையை ஏற்படுத்தி தவற்றை உணர்ந்த பின் விலக்கிக் கொள்கின்றன.இது தவறு செய்பவன் திருந்துவதற்கான வாய்ப்பைக் கொடுக்கும்.