இந்து மதக் கடவுளை இந்து மதத்தை சார்ந்தவர்கள் விமர்சிப்பதற்கு உரிமை உண்டு.
20 January 2018by
Vijayakumaran
இந்து மதக் கடவுளை இந்து மதத்தை சார்ந்தவர்கள் விமர்சிப்பதற்கு உரிமை உண்டு.
மற்ற மதக் கடவுளை இந்துக்கள் விமர்சிப்பதும், இந்து மதக் கடவுளை மற்ற மத்த்வர்கள் விமர்சிப்பதும்,மதநல்லிணக்கத்துக்கு எதிரானது.
நம் வீட்டு முன்னோர்களை நாம் ஆய்வு செய்து பேசும் போது, பக்கத்து வீட்டு முன்னோர்களைப் பற்றி நீ ஏன் பேசமறுகின்றாய் என்று கேட்பது அறிவுள்ள செயலா?.தெரிந்தே தெருச் சண்டையை உண்டாக்கும் சூழ்ச்சி அல்லவா அது.எனவே மாற்று மதக் கடவுள்களை தமிழர்கள் விமர்சிப்பதில்லை,அதனால்தான் தமிழகம் மதக் கலவரம் இல்லா நாடாக உள்ளது.வடநாட்டைப்போல் மதஒற்றுமையை சீர்குலைப்பதுதான் பிஜேபியின் முதல் பணி,அதனால் தான் தமிழக இந்துக்களைப் பார்த்து இந்து மதக் கடவுளை விமர்சிக்கும் நீ மற்ற மதக்கடவுளை விமர்சிக்க அஞ்சுவது ஏன் என்ற கேள்வியை கேட்டு நம் மக்களை மூளைச் சலவை செய்து மதக்கலவரத்தை ஏற்படுத்தி அதில் அரசியல் லாபம் அடையலாம் என்ற கீழ்தரமான சூழ்ச்சி தான் அந்தக் கேள்வியின் நோக்கம்.
மத வேற்றுமையை மறந்து மொழியால் ஒற்றுமையுடன் வாழும் உலகின் ஒரே சமூகம் தமிழர்கள் மட்டும்தான் இந்தப்பெருமை நம்மால் அழிந்து விடாமல் மத ஒற்றுமையை தமிழகத்தில் காப்போம் !சூழ்ச்சியை வெல்வோம்!