தேர்தலில் இட ஒதுக்கீடு என்பது ஜனநாயக படுகொலை!என்ற விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல நேர்மையான அரசியல் தலைவர் ஒருவர் கூட இல்லை என்பதை பார்க்கும்போது வேதனையாக உள்ளது.
என்னுடைய வாக்கு என் உரிமை, இதை பணத்துக்காகவோ, மதத்துக்காகவோ, சாதிக்காகவோ, சுயநலத்துக்காகவோ, அல்லது நாட்டு நலனுக்காகவோ, எதற்காக வேண்டுமானாலும் என் உரிமையை பயன்படுத்தலாம், இதில் அரசியல் கட்சிகளும், நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் தலையிடுவது ஜனநாயகம் அல்ல.
தேர்தல் ஆணையத்தின் பணி, வாக்காளர்களின் உரிமையில் தலையிடுவது அல்ல, அவர்களின் உரிமையை பயன்படுத்த பாதுகாப்பு கொடுப்பதே ஆகும்.
என்னுடைய ஓட்டு யாருக்கு என்பதை நானே முடிவு செய்வேன், என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் இட ஒதுக்கீடு மூலம் என்னை நிர்பந்திப்பது ஜனநாயகம் அல்ல.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கல்வியில், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்வது தவறில்லை. காரணம் அது நிர்வாகம், அதற்காக தான் மக்களாட்சி. ஆனால் தேர்தலில் மக்கள் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே மக்களை நிர்ப்பந்திப்பது தான் ஜனநாயகத்துக்கு எதிரானது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட M.P,M.L.A,க்கள், மக்களின் தீர்ப்பை ஏற்காமலும் அல்லது மக்களின் தேர்ந்தெடுக்கும் ஆற்றலை நம்பாமலும், பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும்,பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பொதுத்தேர்தலில் இட ஒதுக்கீடு செய்து சட்டம் இயற்றியது, வரம் கொடுத்தவன் தலையிலேயே கையை வைப்பதற்கு சமமானது. இது வாக்காளர்களின் ஜனநாயக உரிமைக்கு எதிரானது.
நான் சொல்பவர்களில் ஒருவரை தான் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பெண்களுக்கும் தேர்தலில் இட ஒதுக்கீடு கொடுத்து வாக்காளர்களுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி வாக்காளர்களின் உரிமையை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே பறிப்பது, ஜனநாயகப் படுகொலை!.இதை உச்ச நீதிமன்றம் கண்டிக்காதது வியப்பாக உள்ளது!
சான்றோர்களும், ஊடகங்களும், மக்களிடம் சமத்துவம், பெண்ணுரிமை, பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதால் மட்டுமே ஜனநாயகம் வலுப்பெறும். சட்டங்களால் வாக்காளர்களின் கைகளை கட்டினால், திறமை இல்லாதவர்களும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் தான் நாட்டை ஆள்வார்கள்.
இந்த கருத்து ஊடகங்களில் விவாதப் பொருளாகும் வரை அனைவரும் பகிர்ந்து நம்முடைய ஜனநாயக உரிமையை அரசியல்வாதிகளிடம் இருந்து மீட்டெடுப்போம்.
ஜனநாயகத்தை மதிப்போம் !
உரிமையைப் பாதுகாப்போம்!!