NLC நிர்வாகம் விளைநிலங்களை அழிப்பதை பார்த்து பாமரன் முதல் உயர் நீதிமன்ற நீதிபதி வரை அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றார்கள். காரணம் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் மனித சமுதாயத்திற்கு உணவு கொடுக்கக்கூடிய நிலத்தை அழிக்கின்றார்களே,இனி இந்த நிலம் பாலைவனம் போல் ஆகிவிடுமே என்ற அச்சம் தான். இந்த நிலையில் இந்தப் பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி திருமாவளவன் எம்பி ஏன் மக்களின் உணர்வை இதுவரை வெளிப்படுத்தவில்லை ?காரணம் நிலம் கொடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் (இவர்கள் பாணியில் சொன்னால் )மேல் தட்டு மக்கள் என்பதனால்தானா?
வாக்காளர்கள் சாதி, மதம், இனம் பார்த்து வாக்களிப்பது என்பது வாக்காளரின் உரிமை, இதை தவறு என்று சொல்ல யாருக்கும் தகுதியில்லை. இந்த நிலையில் திருமாவளவன் சிதம்பர தொகுதியில் எம் பி ஆக வெற்றி பெற்ற பிறகு அவர் ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டியில் சொன்னார் மேல் தட்டு சாதியினர் சாதி வேற்றுமை பார்ப்பதால் தான் நான் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன் என்று. இது உண்மையா என்றால் உண்மைதான்,இதில் இன்னும் ஒரு உண்மையும் உள்ளது, மேல் தட்டு மக்கள் சாதி வேற்றுமை பார்க்காததால் தான் அவர் வெற்றி பெற்றார் என்றும்.
பாதி நீர் இருந்த ஒரு பானையைப் பார்த்து ஒருவர் சொன்னார் அரைப்பானை நீர் இருக்கு என்று, அதே பானையை மற்றொருவர் பார்த்து சொன்னார் பாதிப்பானை காலியாக உள்ளது என்று, இதில் இரண்டாவதாக சொன்னவர் திருமாவளவனை போன்றவர். ஒருவர் இந்த சமுதாயத்தை எப்படி பார்க்கின்றாரோ அப்படித்தான் இந்த சமுதாயம் அவருக்கு தெரியும்.
திருமாவளவனை மக்கள் சாதிப்பாகுபாடோடு பார்த்தார்களா என்பதற்கு அவர் பெற்ற வெற்றியே சான்று.
திருமாவளவன், எம்பி. மக்களை சாதி பாகுபாடோடு பார்க்கிறாரா என்பதற்கு அவர் இதுவரை என்எல்சிஐ எதிர்த்து கட்டணம் தெரிவிக்காததே சான்று.
ஒரு வாக்காளர் சாதி பார்த்து வாக்களிக்கலாம், அது அவர் உரிமை. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி சாதி பார்த்து செயல்படுவது தான் உண்மையான சாதி பாகுபாடு.
சாதி ஒழிய வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை. ஆனால் சாதி பாகுபாடு பொதுவெளியில் பார்க்கக் கூடாது என்று தான் உள்ளது. இங்கு சட்டத்திற்கு எதிராக செயல்படுவது மக்களா?மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா ?என்பதை மக்களே முடிவு செய்வார்கள்.