அடிப்பதை தடுத்து கொண்டு இருந்தால் தொடர்ந்து அடித்துக் கொண்டு தான் இருப்பார்கள், நாம் திருப்பித் தாக்கினால் தான் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
ஹிந்தியை எதிர்ப்பது என்பது அடியை தடுப்பது போல் தான், இது போன்ற மக்களை ஏமாற்றும் அரசியலை திரு ஸ்டாலின் அவர்கள் செய்யாமல் அனைத்து மாநில மொழிகளுக்கும் ஹிந்திக்கு நிகரான தேசிய அலுவல் மொழி உரிமை வேண்டும் என்று மிகப்பெரிய போராட்டம் நடத்தினால் மட்டுமே நம் மொழியை நாம் பாதுகாக்க முடியும்.
மொழியைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாத தமிழர்கள் பலர் ஹிந்தி மொழி எதிர்ப்பை விரும்பவில்லை, இவர்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றால் இந்திக்கு நிகரான அங்கிகாரம் தமிழ் மொழிக்கும் வேண்டுமென்று மிகப்பெரிய போராட்டம் நடத்தினால் மட்டுமே சாத்தியம்.