சமூக நீதிக்கு எதிராக சாதி ஒழிய வேண்டும் என்று திராவிட இயக்கங்கள் மக்களை ஏமாற்றி, சிறுபான்மை சாதியினர் மக்களை கடந்த 75 ஆண்டுகளாக ஆண்டு விட்டார்கள், செல்வங்களையும் பல ஆயிரம் கோடிக்கு சேர்த்து விட்டார்கள்.
மக்களிடம் சாதி உணர்வை தூண்டி பெரும்பான்மை சாதியின் தலைவர்களான ராமதாஸ், திருமாவளவன் போன்ற தலைவர்கள் பல கோடிகளை சம்பாதித்து மிகப்பெரிய ஆளுமையாக இந்த சமுதாயத்தில் வாழ்கின்றார்கள். ஆனால் மக்கள் சாதியைப் பற்றிய புரிதல் இல்லாமல் சாதி ஒழியனும் என்றாலும் கை தட்டுகின்றான், சாதி உணர்வை தூண்டினாலும் கை தட்டுகின்றான்.
பாவம் இந்த அறிவில்லாத மக்கள், சாதி ஒழிய வேண்டும் என்பதும், சாதி உணர்வை தூண்டுவதும் அரசியல் சூழ்ச்சி என்பதை எப்பொழுது புரிந்து கொள்வார்களோ…
என்னுடைய கருத்து :-
பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை,
பணமே வாழ்க்கை இல்லை என்பதை போல்,
சாதி இல்லாமல் அரசியல் இல்லை, சாதி மட்டுமே அரசியலும் இல்லை.
எனவே சாதி ஒழிய வேண்டும் என்பவரையும் அரசியலில் தவிர்க்க வேண்டும், சாதி உணர்வை தூண்டுபவர்களையும் அரசியலில் தவிர்க்க வேண்டும்.