மாநிலங்களின் கூட்டமைப்பு தான் இந்தியா, இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அனைத்து குடிமக்களும் சமம், அதன்படி அனைத்து மாநிலத்தில் வாழும் மக்களும் சமம், அனைத்து மாநில மக்களும் சமம் என்றால் மாநில மொழிகள் அனைத்திற்கும் சமமான அங்கீகாரம் வேண்டும். எனவே 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த இனிய தருணத்தில் அனைத்து குடிமக்களும் சமம் என்பதை உறுதிசெய்ய இந்திக்கு நிகராக அனைத்து மாநில மொழிக்கும் அங்கீகாரம் வேண்டும் என்று நம் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுமாறு நான் பெற்ற சுதந்திர உரிமையைப் பயன்படுத்திகேட்டுக்கொள்கின்றேன்.