புத்தர், பட்டினத்தார் போன்ற நாட்டைஆண்ட அரசர்கள் ஆன்மீகத்தால் ஆட்சியை விட்டு துறவறம் கொண்டனர் அன்று. இன்று பல கோடி சொத்தை காப்பாற்ற இமயமலை சென்று துறவறம் கொண்டது போல் நடித்து நாட்டை ஆள ரஜினி நினைப்பதற்கு பெயர்தான் ஆன்மீக அரசியல்.
ஆன்மீக ஞானம் பெற்றவர் நாட்டை ஆளநினைக்க மாட்டார் என்பது விதி.
நெல் மிதக்காது, பதர்தான் மிதக்கும், நேர்மையானவர்கள் ஒருபோதும் தன் நேர்மையை சகாயம் போல் ஏலம் விடமாட்டார்கள்.
ரஜினி, கமல், சகாயம், போன்ற புதிய தலைவர்களுக்கு கொள்கையே இல்லை, நேர்மையாக ஆட்சி செய்வேன் என்பது கொள்கையல்ல, ஊர் பேர் இல்லாத பேருந்தை பாதுகாப்பாக ஓட்டுவேன் அனைவரும் ஏறுங்கள் என்பதற்குசம்ம்.
இவர்களை நம்பி ஏறிவிட்டால் மக்களை எங்கு கொண்டுபோய் விடுவார்களோ!
கடவுள்தான் இந்த மக்களை காப்பாற்ற வேண்டும்.