அனைவரும் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்வது ஜனநாயக விழிப்புணர்வா !அல்லது வாக்காளர்களை நிர்பந்திக்கும் செய்யலா!
சரியான பதிலை தேர்வுசெய்யும் தேர்வு முறையில் தவறான பதிலை தேர்வு செய்தால் மதிப்பெண் குறைந்து விடும் என்பதை போல் அரசியல் பற்றிய தெளிவு இல்லாமல் ஜனநாயகத்தை பற்றிய விழிப்புணர்வும் இல்லாதவர்களை வாக்களிக்க வேண்டுமென்று நிர்ப்பந்தித்தால், அரசியல் தெரியாமல் இராமர் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்ற அறியாமையில் வாழ்பவர்கள் ஏதோ ஒரு கட்சிக்கு வாக்களிப்பதால் தேர்தல் முடிவே தவறாகி விடுகிறது.
அரசியல் தெரிந்த, ஜனநாயகத்தின் முக்கியத்துவம் தெரிந்தவர்கள் யாரும் உள்ளூரில் இருந்தால் வாக்களிக்காமல் இருக்க மாட்டார்கள் என்ற நிலையில், அரசியல் தெரியாதவர்களை வாக்களிக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது, தேர்வில் பதில் தெரியாத கேள்விக்கு பதில் எழுதவேண்டும் என்று நிர்பந்தித்தால் தேர்வில் வெற்றி பெறும் மாணவனும் மைனஸ் மதிப்பெண் பெற்று தேர்வில் தோல்வி அடைவது போல், அரசியல் தெரியாதவர்களை வாக்களிக்க வேண்டும் என்று சொல்வது வெற்றி பெறும் வேட்பாளர் தோல்வி அடைவதற்கு வாய்ப்பு உள்ளது.
“அரசியல் தெரியாதவர்கள் வாக்களிக்காதீர்கள் “
அரசியல் தெரியாதவர்கள் வாக்களிப்பதால் தான் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் அரசியல் மீது வெறுப்பு ஏற்படுகிறது, எனவே யாரும் யாரையும் வாக்களிக்க நிர்பந்திக்க தீர்கள், காரணம் அரசியல் தெரிந்தவர்கள் யாரும் வாக்களிக்காமல் இருக்கமாட்டார்கள்.