26 March 2021
by
Vijayakumaran
இந்த கட்டுரையை படிக்கும் வாசகர்கள் தங்கள் மனசாட்சியை சாட்சியாக வைத்து “இந்த கட்டுரையை படித்தவுடன் 10.5 % ஒதுக்கீட்டில் என் அறிவு சொல்லும் கருத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன் “என்றுசத்தியம் செய்துவிட்டு படிக்கவும், காரணம் தனக்கு எது நல்லதோ அதுவே சரியானது என்ற உணர்வின் அடிப்படையில் வாழ்பவர்கள் இந்த சமுதாயத்தில் 1000க்கு999பேர்.
கடந்த 10 ஆண்டுகளாக பல அறிவியல் சார்ந்த புதிய நீதியை நான் எழுதி இருக்கின்றேன், ஆனால் படித்தவர்களில் ஒருவர்கூட உணர்வின் நிலையிலிருநது அறிவு நிலைக்கு மாறவில்லை என்பதே உண்மை. எனவேதான் மனசாட்சியை சாட்சியாக வைத்து சத்தியம் செய்ய சொல்கின்றேன்.
என்னுடைய கட்டுரைகள் அனைத்தும் கணிதம் போன்றவை, எனக்கு விடை முக்கியமல்ல steps தான் முக்கியம் steps சரியாக இருந்து விடை எதுவாக இருந்தாலும் நான் ஏற்றுக் கொள்வேன். ஆனால் வாசகர்கள் அப்படியல்ல அவர்களுக்கு விடை தான் முக்கியம்.
10x10=110 தவறான விடை என்றாலும் தவறான விடையால் லாபம் அடைபவர்கள் கணக்கை சரி என்பார்கள்.10x10= 90 என்று தவறாக கணக்குப் போட்டாலும் தவறான விடையால் லாபம் அடைபவர்கள் கணக்கை சரி என்பார்கள் அதனால்தான் இந்த சமுதாயத்தில் யார் எதை செய்தாலும் அதனால் லாபம் அடைவர் சரி என்பதும் பாதிக்கப்படுகின்ற அவர் தவறு என்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
தொடர் வினை தத்துவத்தின் படி கடவுள் இல்லை என்று ஆய்வு செய்து கட்டுரை எழுதினேன் பகுத்தறிவாளர்கள் பாராட்டினார்கள், அதே தொடர்வினை தத்துவத்தின் படி விதி உண்மை என்று எழுதினேன் பகுத்தறிவாளர்கள் காணாமல் போய்விட்டார்கள்.
விதி உண்மை என்று எழுதியதும் ஆன்மீகவாதிகள் பாராட்டினார்கள், கடவுள் இல்லை, கடவுள் செய்வதை இயற்கை தான் செய்கின்றது என்று எழுதினேன் ஆன்மீகவாதியும் மௌனமாகி விட்டார்கள்.
சமத்துவம் இயற்கையின் நீதி என்று எழுதினேன் தாழ்த்தப்பட்டவர்கள் பாராட்டினார்கள், தேர்தலில் இட ஒதுக்கீடு ஜனநாயகத்துக்கு எதிரானது என்று எழுதியவுடன் பாராட்டியவர்களும் காணாமல் போய்விட்டார்கள்.
எனவே அனைவருக்கும் விடை தான் முக்கியம் காரணம் முக்கியமல்ல என்பது தெளிவாக தெரிவதால் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டைப் பற்றி எழுத விருப்பம் இல்லாமல் எழுதுகின்றேன் சத்தியம் செய்தவர்கள் அவர்கள் சத்தியத்தை மதிக்கிறார்களா என்று பார்ப்போம்.
சாதி இட ஒதுக்கீடு என்பது சமுதாய நீதி, சமூக நீதி ஒரு அறிவியல்.
விளைநிலத்தில் பாத்திகட்டி நீர்பாசனம் செய்தால் மட்டும் தான் அனைத்து பயிர்களுக்கும் நீர் கிடைக்கும், விளைச்சல் அதிகம் கிடைக்கும். இந்த அறிவியல் தத்துவத்தை அடிப்படையாக வைத்துதான் அனைத்து சாதியினருக்குமான இட ஒதுக்கீடு சமூக நீதியாக பார்க்கப்படுகின்றது.
மாநிலம் பல மாவட்டமாக பிரிக்கப்பட்டதும், மாவட்டம் மீண்டும் இரண்டாக பிரிக்கப்படுவதும் எப்படி நிர்வாகத்துக்கு நன்மையோ, அதுபோல் MBC,BC என்பதைப் பிரித்து SC/ST க்கு கொடுப்பதுபோல் சாதி வாரியாக இட ஒதுக்கீடு கொடுத்தால் அனைவருக்கும் ஏற்ற தாழ்வு இல்லாமல் சீராக கல்வியும், வேலை வாய்ப்பும் கிடைக்க சாதிவாரிய இட ஒதுக்கீடு உதவும்.
சமூக நீதியின் அடுத்த நிலையாக இட ஒதுக்கீடு பெற்ற சாதியினர் முன்னேறிய சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை பெற முடியாதபடி சட்டம் இயற்றவேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்களுக்கு உள் ஒதுக்கீடாக அந்தந்த சாதி ஒதுக்கீடு உள்ளேயே 20 சதவீதம் ஒதுக்க வேண்டும். இவைகள் அனைத்தும் சாதி அடிப்படையில் கணக்கெடுப்பு எடுத்து நடைமுறைப்படுத்தினால் மட்டும்தான் அது சமூக நீதியாக இருக்கும்.
MBC இல் உள்ள அனைத்து சாதியினருக்கும் 20 சதவிகிதம் ஒதுக்கீடு உள்ள நிலையில் எந்த சாதியினர் எத்தனை சதவிகிதம் உள்ளார்கள் என்ற புள்ளிவிவரமும்,தெளிவும் இல்லாத நிலையில் வன்னியருக்கு மட்டும் 10.5 சதவீத இட ஒதுக்கீடு எப்படி சமூக நீதியாக இருக்கமுடியும்.
12 சதவிகித வன்னியர்கள் இருந்தால் வன்னியர்களுக்கு அநீதி, 9% வன்னியர்கள் இருந்தால் மற்ற சாதியினருக்கு அநீதி.இங்கு கணக்கு தப்பு, விடையாருக்கு சாதகமாக உள்ளதோ அவர்களுக்கு 10.5 சதவிகிதம் சரிதான்.
பாதிக்கப்பட்டவன் கணக்கை தப்பு என்பதும் பயன் அடைந்தவன் விடையை சரி என்று சொல்வதும் அரசியலில் சர்வ சாதாரணமாகிவிட்டது.
நமக்கு எது நன்மையோ அதுவே சரி என்று எண்ணும் மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப தான் அரசியல் தலைவர்களும் சமுதாய நீதியை மக்களிடம் தவறாக போதிக்கிறார்கள்.
10.5 சதவீதம் வன்னியருக்கு சாதகமா அல்லது பாதகமா என்று பார்க்காமல், MBCயில் உள்ள மற்ற சாதியினரின் ஒப்புதல் இல்லாமல் அவசர கோலத்தில் தேர்தல் அரசியலுக்காக இட ஒதுக்கீடு கொடுத்தது சாதி நல்லிணக்கத்தை பாதிப்பதாக உள்ளதால் 10.5 சதவீத ஒதுக்கீடு சமூகநீதி அல்ல.
in Politics