Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing

    தமிழர்கள் மூளைச்சலவையிலிருந்து விடுபட வேண்டும்!!!

  • All Blogs
  • Politics
  • தமிழர்கள் மூளைச்சலவையிலிருந்து விடுபட வேண்டும்!!!
  • 2 April 2026 by
    Vijayakumaran
    மூளைச்சலவை செய்வதற்கும், விழிப்புணர்வு செய்வதற்கும் உள்ள வேற்றுமையை ஆய்வு செய்து இந்த கட்டுரையை எழுதி இருக்கின்றேன். தொடர்வினையின் தொடர்பு இல்லாமல் சுயமாக நாம் எதை ஒன்றையும் சிந்திக்க முடியாது என்பதற்கு ஏற்ப இந்த தலைப்பை நான் ஆய்வு செய்வதற்கு முன்னால் காவல்துறை அதிகாரி ரவி IPS அவர்களின் காணொளியை நான் பார்த்ததே காரணம். நான் பார்த்த காணொளியில் வடகொரிய மக்கள் தேசப்பற்று மிக்கவர்களாக இருப்பதற்கு காரணம் ஆட்சியாளர்கள் மக்களை மூளைச்சலவை செய்து வைத்துள்ளார்கள் என்று ரவி IPS அவர்கள் தெரிவித்து இருந்தார். இதை நான் கேட்டதும் நம்ம ஊர் பகுத்தறிவாளர்களும், முற்போக்குவாதிகளும் பேசுவது போலவே இருந்தது. நாம் பேசுவது மட்டுமே விழிப்புணர்வு பேச்சு,மற்றவர்கள் பேசினால் அது மூளைச்சலவை என்று சொல்வதைப் போல் இருந்தது.சரி வாருங்கள் விருப்பு வெறுப்பு இல்லாமல் எது மூளைச்சலவை எது விழிப்புணர்வு என்று ஆய்வு செய்து கண்டுபிடித்து விடுவோம்.

    சமூக ஊடகங்களில் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்கின்ற இந்த காலத்தில் எது நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது எது முளைச்சலவை செய்கின்றது என்பதை இனம் பிரிக்க எளிமையான அளவுகோல் ஒன்று இருக்கின்றது அதை பயன்படுத்தி எது மூளைச்சலவை எது விழிப்புணர்வு என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். எதையெல்லாம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறதோ அது அனைத்தும் விழிப்புணர்வு வகையைச் சார்ந்தது, எது எல்லாம் புரிய வைப்பது போல் உவமைகளாலும், உதாரணங்களாலும் நம்ப வைக்கப்படுகின்றதோ அவைகளில் 99 சதவிகிதம் மூளைச்சலவை வகையை சார்ந்தது.இந்த அளவீட்டை வைத்து ஏமாற்று பேர்வழிகளிடம் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

    கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் பயத்த காலகட்டத்தில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடிகர் விவேக் அவர்கள் தானே முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு மக்களையும் போட்டுக்கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தினார் ஆனால் மறுநாளே அவர் தடுப்பூசியின் பாதிப்பால் பரிதாபமாக இறந்து விட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே, ஒரு திரைப்பட நடிகருக்கு மருத்துவத் துறையைப் பற்றி என்ன தெரியும்? ஏன் இவரைப் போன்ற மருத்துவத்துறையில் இல்லாத பிரபலங்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்? பல நாடுகள் கொரோனா தடுப்பு ஊசிய தடை செய்த நிலையில், தடுப்பூசியால் பலர் இறந்த நிலையில், மருத்துவத்துறையை சார்ந்த வல்லுனர்கள் குறைந்த கால கெடுவுக்குள் தடுப்பூசியை தயாரிப்பது பாதுகாப்பானது அல்ல என்று தெரிவித்த நிலையில்,தடுப்பூசியால் எந்த பாதிப்பும் இல்லை என்பதை மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக மூளைச்சலவை செய்வதற்காகவே பிரபலங்களை அரசு பயன்படுத்திக் கொண்டது.மக்களை நம்ப வைக்க அரசு முயற்சி செய்வதால் இது விழிப்புணர்வு அல்ல மூளைச்சலவை செய்ய என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
    கொரோனா கிருமித் தொற்று ஏற்படாமல் இருக்க இந்தியர்கள் அனைவரும் சிறிது நேரம் மின்சார விளக்கை முழுவதுமாக அணைத்துவிட்டு வீடுகளில் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் தெரிவித்தது அறிவியலுக்கு முரணான நம்பிக்கை சார்ந்தது என்பதால் இதுவும் ஒரு மூளைச்சலவை தான்.

    தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு தேவை என்பதால் இந்த  ஆய்வு கட்டுரையில் அரசியலில் மக்கள் எப்படி மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

    வடகொரிய மக்கள் தேசப்பற்றோடு இருப்பதற்கு காரணம் அவர்கள் ஆட்சியாளர்களால் முளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்கள் என்று விழிப்புணர்வுக்கும்,மூளைச் சலவைக்கும் வித்தியாசம் தெரியாமல் ஒரு ஓய்வு பெற்ற IPS அதிகாரி இருப்பதால்தான் நம் தமிழ்நாட்டில் “ராமர் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலையும் இல்லை என்ற  பாட்டை திரைப்படத்தில் எழுத முடிகின்றது.

    அரசியலை சாக்கடை என்று சொல்வது, படித்தவர்களும், பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களும் அரசியல் பேசுவதை கேவலமாக நினைப்பது, வாக்களிக்காமல் இருப்பதை பெருமையாக பேசுவது போன்றவற்றை அரசியல் அறியாமையாக தான் நான் பார்க்கின்றேன்.அரசியல் சாக்கடை அல்ல அது நம் உயிர் மூச்சு “நம்மில் ஒருவர் தான் நம்மை ஆள வேண்டும் “என்ற உரிமையைப் பெற நம் முன்னோர்கள் பல்லாயிரம் பேர் தன்னுடைய உயிரை கொடுத்துப்பெற்ற உரிமை நம்முடைய ஜனநாயக உரிமை எனவே அரசியலை கேவலமாக நினைக்காதீர்கள். பாமரனாக இருந்தாலும்,படித்தவனாக இருந்தாலும் செல்வந்தனாக இருந்தாலும் அனைவருக்கும் மூச்சுக்காத்து எப்படி முக்கியமோ அது போல் அரசியல் புரிதலும் அனைவருக்கும் முக்கியம்.ஒவ்வொருவரும் அரசியல் புரிதலோடு வாக்களிப்பது நம்முடைய உரிமை,இந்த உரிமையை நாம் தவறவிட்டால் நம்முடைய அனைத்து உரிமைகளும் பறிபோய்விடும்!

    நம் சமுதாயத்தில் ஊழலும், லஞ்சமும் பெருகிவிட்டது வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் தவறு செய்கின்றார்கள் எனவே நல்லவரை தேர்ந்தெடுக்கின்றேன் என்று மாற்றானை தேர்தலில் தேர்ந்தெடுத்து ஏமாந்து விடாதீர்கள். அரசியலில் சாதி,மதம்,இனம் என்று எதையும் பார்க்கக் கூடாது என்று தமிழக மக்களை மூளைச்சலவை செய்து வைத்துள்ளதால் தான் எம்ஜிஆர்,ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் என்று தமிழர் அல்லாதவர்கள் தமிழ்நாட்டை அரை நூற்றாண்டுகள் ஆண்டு விட்டார்கள்.

    “நம்மில் ஒருவர் தான் நம்மை ஆள வேண்டும்” என்ற அரசியல் புரிதல் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.
    தமிழக மக்கள் - தமிழ்நாட்டு மாநில கட்சிகளுக்கு தான் வாக்களிக்க வேண்டும், பிஜேபி,காங்கிரஸ் போன்ற வட இந்தியர் கட்சிகளுக்கு ஒருபோதும் வாக்களிக்கக்கூடாது.

    இந்துக்கள் - இந்துக்களுக்கு தான் வாக்களிக்க வேண்டும்.
    தமிழர்கள் -தமிழர்களுக்கு தான் வாக்களிக்க வேண்டும், தெலுங்கர்களுக்கு வாக்களித்தால் ஆட்சியில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும்.
    தெலுங்கர்கள் - தெலுங்கர்களுக்கு வாக்களித்தால் தான் ஆட்சியில் அவர்களுக்கான பிரதித்துவம் இருக்கும்.
    சமூக நீதி அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்றால் சாதி பார்த்து தான் வாக்களிக்க வேண்டும். நாடார் சமுதாயத்தை சேர்ந்த காமராஜர் முதல்வராக இருந்ததால்தான் நாடார் சமுதாயம் இன்று உயர்ந்த நிலையில் உள்ளது. தெலுங்கர் கருணாநிதி முதல்வராக இருந்ததால்தான் தமிழ்நாட்டில் தெலுங்கர் உயர்ந்த நிலையில் இருக்கின்றார்கள். எனவே அரசியலில் சாதி பார்க்கக் கூடாது என்பது மாற்றான் நம்மை ஆள்வதற்காக செய்யப்பட்ட மூளைச் சலவை.

    இந்திய அரசியலமைப்பு சட்டம் சாதி சமத்துவம் வேண்டும் என்று தான் வலியுறுத்துகின்றதே தவிர சாதி ஒழிய வேண்டும் என்று எந்த இடத்திலும் இல்லை. ஆனால் சமூக நீதிக்கு எதிராக தெலுங்கு திமுகவினர் தன்னுடைய சாதியை யாரும் கேட்டு தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே பகுத்தறிவாளர்கள், முற்போக்கு வாதிகள் என்ற முகமூடியை போட்டுக்கொண்டு சாதி ஒழிய வேண்டும் என்றும்,ஒருவர் சாதியை கேட்டு தெரிந்து கொள்வது இழிவான செயல் என்றும் தமிழ் குடிகளை மூளைச்சலவை செய்து பெரும்பான்மை தமிழ் குடிகளான வன்னியர், தேவர்,பட்டியல் இனத்தவர் என்று பல தமிழ் குடிகளின் அரசியல் அதிகாரத்தை கடந்த அரை நூற்றாண்டுகளாக அபகரித்து விட்டார்கள்.

    மூச்சுக்கு 300 தடவை சமூக நீதி, சமூகநீதி என்று பேசும் ஸ்டாலின் அவர்கள் எந்த சமூக நீதியின் அடிப்படையில் முதல்வராக உள்ளார் ? சமூகநீதி அடிப்படையில் வன்னியருக்கு உள் ஒதுக்கீடாக 10.5% அதிமுக அரசால் கொடுக்கப்பட்டதை சமூக நீதி காவலர் ஸ்டாலின் ஏன் ஐந்து ஆண்டுகளாக நிறைவேற்றாமல் தடையாக இருந்தார்? வன்னியரை போல் அனைத்து தமிழ் குடிகளும் வந்தேறி தெலுங்கர் கருணாநிதியின் குடும்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தான் என்பதை புரிந்து வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியை பார்க்காமல் வட இந்தியர்களின் கட்சியான பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வாக்கை கூட செலுத்தாதீர்கள். காரணம் அவர்கள் நம்மில் ஒருவர் அல்ல,திமுக வட இந்தியர்களின் கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்டு மற்றொரு வட இந்திய கட்சியான பிஜேபி கூட்டணி கட்சிக்கு வாக்களித்தால் மாநில உரிமைகள் பறிபோய்விடும் என்று தமிழக மக்களை மூளைச்சலவை செய்து வைத்துள்ளார்கள்.பிஜேபி கட்சிக்கு வாக்களித்தால் எந்த அளவுக்கு மாநில உரிமைகளுக்கு கேடோ அந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதும் கேடு தான்.

    இரண்டாவதாக தெலுங்கர்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள திமுக வுக்கு வாக்களிக்காமல் தமிழர்களின் மாநில கட்சிகளுக்கு சமூக நீதியை பாதுகாக்கும் வகையில் சாதி பார்த்து வாக்களித்து உங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள். நம்முடைய வாக்கு தான் நம் தலையெழுத்தையே தீர்மானிக்கின்றது என்ற புரிதலோடு வாக்களியுங்கள்.

    மேலும் அரசியல் விழிப்புணர்வை பெற நான் எழுதிய “என் பார்வையில் அரசியல்” என்ற புத்தகத்தை படித்து பயன்பெறுங்கள்.

    https://www.vijayakumaran.in/en-parvaiyil-arasiyal

    in Politics
    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us