Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing

    அரசியல் 🇮🇳🇮🇳

  • All Blogs
  • Politics
  • அரசியல் 🇮🇳🇮🇳
  • 2 April 2026 by
    Vijayakumaran
    அரசியல் பேசாமல் அரசியலைப் பற்றி பேசுவோம் வாருங்கள், அரசியல் என்றால் என்ன?அரசியலை யார் கிட்ட பேசணும்? எங்க பேசணும் ?என்பதை பற்றிய என்னுடைய கருத்தே இந்த கட்டுரை.

    அரசியல் என்றால் என்ன?
    தனக்கு எந்த கொள்கையால் நன்மையோ அதை ஆதரித்து பேசுவது தான் அரசியல், இதுதான் ஜனநாயகம் நமக்கு கொடுக்கும் உரிமை.

    மதம், சாதி, மொழி, பொருளாதாரம், இனமென்று ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தனக்கான ஆதரவாளர்களை ஒருங்கிணைப்பதன் மூலம் தான் தேர்தலில் வெற்றி பெறுகின்றார்கள்.

    சிறுபான்மை இஸ்லாமியரை எதிர்த்து பிஜேபி மத அரசியலும், சிறுபான்மை பிராமணரை எதிர்த்து திக சாதி அரசியலும், சிறுபான்மை முதலாளிகளை எதிர்த்து கம்யூனிஸ்ட் பொருளாதார அரசியலும், ஒன்றியத்தை எதிர்த்து திமுக மொழி அரசியலும்,சிறுபான்மை மொழியினரை எதிர்த்து நாம் தமிழர் கட்சி இன அரசியலும் என்று மக்களை ஒருங்கிணைப்பதில் தான்  அரசியல் கட்சிகள் மக்களிடம் செல்வாக்கை பெறுகின்றன.

    சாதி ஒழிந்தால் தனக்கு நன்மை என்றால் அந்தக் கொள்கையை எந்த கட்சி வலியுறுத்துகின்றதோ அதற்கு அவர் ஆதரவு கொடுப்பார்.

    சாதியால் தனக்கு நன்மையும், பெருமையும் கிடைக்கும் என்றால் அதை எந்த கட்சி பாதுகாக்கின்றதோ அதற்கு ஆதரவு கொடுப்பார்.

    முதலாளித்துவம் ஒழிந்து அனைத்தும் பொதுவுடமை ஆகிவிட்டால் ஏழைகளுக்கும், தொழிலாளிகளுக்கும் நன்மை என்பதால் வறுமையில் இருப்பவர் கம்யூனிசத்தை ஆதரிப்பார்கள்.

    அரசியல் என்பது அரசியல் கட்சிகளை ஆதரித்து பேசுவதும் ,எதிர்த்து பேசுவதும் மட்டுமல்ல. தனக்கு எந்த கொள்கை நன்மையோ அதை ஆதரித்து பேசுவதும், எழுதுவதும் அரசியல் தான்.
    தனக்கு எது நன்மையோ அந்தக் கொள்கையை மற்றவர் மீது திணிப்பதற்காக எழுதப்படும் கவிதைகள்,இலக்கியங்கள்,நாவல்கள், கட்டுரைகள் அனைத்தும் அரசியல் தான்.

    இரண்டு நாட்களுக்கு முன் நான் படித்த இரண்டு வரிகள் “நிலத்தை தொடும் வரை மழையாகத்தான் பொழிகின்றது நிலமடைந்ததும் ஊர் நீராகவும், சேரி நீராகவும் சேகரமாகிறது”இது ஒரு கவிதை என்று கடந்து விட முடியாது, இதில் சாதி அரசியல் இருக்கின்றது.இப்படிதான் பல எழுத்துக்கள் முகமூடி போட்டுக்கொண்டு பகுத்தறிவு, முற்போக்குச் சிந்தனை,கவிதைகள்,இலக்கியங்கள், நாவல்கள் என்று மற்றவர் மீது அரசியல் கருத்துகள் திணிக்கப்படுகின்றன.

    அரசியலை யாரிடம் பேச வேண்டும்?
    ஒத்த கருத்து உடையவரிடம் தான் அரசியல் பேச வேண்டும், மாற்று கருத்து உடையவரிடம் நம்முடைய கருத்தை திணிக்க கூடாது, நமக்கு நன்மை பயக்கும் கருத்தை மற்றவரும் ஏற்க வேண்டும் என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது.

    அரசியலை எங்கு பேசக்கூடாது ?
    ஒத்த கருத்து உடையவர்கள் கூடியிருக்கும் இடத்தில் அரசியல் பேசலாம், பொது இடத்தில் பொது வாட்ஸ் அப் குரூப்பில் அரசியல் பேசக்கூடாது.காரணம் அரசியல் நம் உரிமையை பெறுவதற்கான இடம்,இதில் மாற்று கருத்து உடையவரிடம் விவாதிப்பதால் எந்த பயனும் இல்லை.

    மதத்தால், சாதியால், மொழியால், இனத்தால், பொருளாதாரத்தால் நம்முடைய அரசியல் கொள்கைகள் ஒருவருக்கு ஒருவர் மாறுபட்டு இருந்தாலும் அதை பொதுவெளியில் வெளிப்படுத்தாமல் நட்போடு வாழ்வதே சிறப்பு.
    in Politics
    தமிழர்கள் மூளைச்சலவையிலிருந்து விடுபட வேண்டும்!!!
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us